Home > கல்லூரிக் கீதம்
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
வாழ்க பாடசாலையென்று
வணங்கிக் கூடி வாழ்த்துவோம்
ஆழி சூழும் ஏழு தீவும்
அறிவு காணும் சாலையாம்
ஊழி ஊழி ஓங்கும் சேவை
உயர்வு காணும் சாலையாம்
வாழி வேலணை மத்திய மகா
வித்தியா சாலையாம்
வாழி ஊழி ஊழி யென்று
வணங்கிக் கூடி வாழ்த்துவோம்
அன்பு ஒளியைக் காட்டும் வழியே
ஆய சின்னம் அதுவாய்க்
கொண்டு ஓங்கும் கொள்கை வழியே
குலாவும் சிறார்கள் வாழ்கவே
நன்று கல்வி நாளும் நல்கி
நல்லொழுக்கம் வளர்க்குமே
நின்று நாமும் நாடும் வாழ
நிலைக்கும் சேவை போற்றுவோம்
ஞானம் சீலம் நாடு எங்கும்
நல்கி மல்கிப் பெருகவே
மான வீர மாணவர்கள்
வளர்த்தெடுக்கும் தாயிவள்
ஆயகலைகள் அறிவியல்கள்
அள்ளி அள்ளி ஊட்டுவாள்
தேனருந்து வண்டு எனத்
திளைத்து நாங்கள் போற்றுவோம்
அன்பு ஆசார் அதிபர் கூடி
ஆக்கம் காட்டும் கோவிலாம்
இன்பத் தமிழோடாங்கிலத்தை
ஏந்திப் போற்றும் கோவிலாம்
நன்று ஆட நயந்துபேச
நமக்கருள் செய் கோவிலாம்
நின்று நாமும் நாடும் வாழ
நிலைக்கும் சேவை போற்றுவோம்
போற்றுவோம் போற்றுவோம்
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்