Home > கொடிக்கீதம்
வேலணை மத்திய கல்லூரியின்
வெற்றியைத் தினமும் சாற்றுங் கொடி
வேற்றுமை நீங்கி ஒற்றுமை பேணி
வானுற உயர்ந்து வாழ்த்தும் கொடி
அன்னையின் புகழை அகிலமே போற்றும்
மன்னிய புகழ்தனை
மண்ணிலே எமக்காய்
மாண்புடன் தந்த கொடி
வெண்மையும் செம்மையும் சேர்ந்தே ஒன்றாய்
சிலிர்த்திடும் எமதுகொடி
வேற்றுமை நீங்கி ஒற்றுமை காண
ஏற்றுவோம் எமதுகொடி
வானுற ஓங்கி எம்புகழ் பேசும்
வனப்புறு வர்ணக்கொடி
வாழ்க கல்லூரி வாழ்கென நிதமும்
வாழ்த்திடும் எங்கள் கொடி
வாழ்த்திடும் எங்கள் கொடி
அன்பு ஆசார் அதிபரும்
ஆற்றல் மிக்க சிறார்களும்
ஏற்றம் தந்த கொடியிதை
என்றும் போற்றி வணங்குவோம்
உலகெலாம் எம் தாயவள்
உவந்து பெற்ற மைந்தர்கள்
பல்கிப் பொருகிப் பணிசெய்ய
பாலமான கொடியிதை
ஏற்றிப் போற்றி வணங்குவோம்
ஏற்றிப் போற்றி வணங்குவோம்
ஆழி சூழும் ஏழுலகும்
அணியாய் ஒருங்கு திரண்டுமே
வாழி வாழி என்றுமே
வாழ்த்தி வணங்கும் கொடியிது
அன்னை தந்த கொடியிது
அவனியிலே நாமெல்லாம்
உன்னதமாய் வாழவே
உயர்ந்து நின்று வாழ்த்துமே!
உயர்ந்து நின்று வாழ்த்துமே!