Home > ஒளிப்படத் தொகுப்பு > வேலணை மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தின் இன்றைய தோற்றம்

கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் சுற்றுவேலி அமைக்கும் பணி இவ்வாண்டின் பாரிய திட்டமாக முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தின் கிழக்கு எல்லை வேலியின் ஒரு சிறு பகுதி தவிர்ந்த 95% மான பகுதி வேலைகள் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலுடன் இணைந்த வளைவு, சுற்றுமதிலாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக கல்லூரி அதிபர் திரு. சி. கிருபாகரன் அவர்களின் மேற்பார்வையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்காக இதுவரையில் எமது சங்கம் 2 201 228.00 (இருபத்தியிரண்டு இலட்சத்து ஆயிரத்து இருநூற்றி இருபத்தியெட்டு) ரூபாய்களைச் செலவிட்டுள்ளது. இதற்கான நிதியுதவியை வழங்கிய எம் உறுப்பினர்களுக்கு சங்கம் பெருமையுடன் நன்றி தெரிவிக்கிறது.