Home > ஒளிப்படத் தொகுப்பு

வேலணை மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தின் இன்றைய தோற்றம்

கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் சுற்றுவேலி அமைக்கும் பணி இவ்வாண்டின் பாரிய திட்டமாக முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தின் கிழக்கு எல்லை வேலியின் ஒரு சிறு பகுதி தவிர்ந்த 95% மான பகுதி வேலைகள் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலுடன் இணைந்த வளைவு, சுற்றுமதிலாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக கல்லூரி அதிபர் திரு. சி....

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

2014ம் ஆண்டின் 6ம் வகுப்பின் புகுமுக மாணவர்க்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 20.01.2014 அன்று கல்லூரியில் நடைபெற்றது. அந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்களுடன் எமது சங்க உறுப்பினர் திருமதி. திலகவதி பரராஜசேகரன். கல்வித் திணைக்கள அதிகாரிகளான திரு. ஆரூரன், திரு. பாஸ்கரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

வித்தியாலய விழா 2013

21ம் ஆண்டு நிறைவில் எமது சங்கத்தின் வித்தியாலய விழா 08.12.2013 அன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடந்தேறியது. நடன நிகழ்வுகள், நாடகங்கள், விவாத அரங்கு, பழைய மாணவரின் நூல் வெளியீடு எனப் பல்கலை நிகழ்வுகளின் பரிமாணங்களை வெளிப்படுத்தி அவையோரின் பாராட்டுக்களைப் பெற்றது. இவ் விழா நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு.

நுழைவாயில் முகப்பு மாடம்

எமது கல்லூரியின்பால் மாணவர் மனதில் ஈர்ப்பினையும், மதிப்பினையும் உருவாக்கும் நோக்கில் எமது சங்கத்தால், இவ்வாண்டின் பாரிய திட்டமாக முன்னெடுக்கப்பட்ட நுழைவாயில் முகப்பு மாட நிர்மாணப் பணி சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நுழைவாயில் 1.11.2013 அன்று கல்லூரி அதிபர் தலைமையில் வட மாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.