Home > Projects > நுழைவாயில் முகப்பு அமைத்தல்

கல்லுாரியின் புதிய நுழைவாயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா எமது கல்லுாரியின் புறத்தோற்றம் அழகுறவும், காண்போர் மனதில் அதன்பால் ஓர் மதிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் கம்பீரமிக்க, கலைத்துவம் மிளிரும் ஓர் புதிய பிரதான நுழைவாயில் நிர்மாணிக்கும் திட்டம் இவ்வாண்டு எமது சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. அதன் அடிக்கல் நாட்டு விழா 25.06.2013 அன்று சம்பிரதாயபூர்வமாக எம் கல்லுாரி அதிபர் திரு.கிருபாகரன் அவர்களாலும், கட்டிடக் கலைஞர் திரு.செ.விக்னேஸ்வரநாதன் அவர்களாலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.