Home > Projects > 2014 இல் தொடரும் பணிகள்

6ம் வகுப்பின் புகுமக மாணவர்க்கு ரூபா 167150.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி வளாகத்தின் புற்றரைப் பராமரிப்புக்காக ரூபா 22000.00 பெறுமதியான புல் வெட்டும் இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியின் நூலகர் வேதனம் , இணையக் கட்டணங்கள் எம்மால் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன.

2014ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஏனைய செயற்றிட்டங்கள்.

விளையாட்டு மைதான புனரமைப்பு

விளையாட்டு மைதான புனரமைப்பின் முதற் கட்டமாக, தற்போதய மைதானத்திற்கும், பிரதான வீதிக்கும் இடையில் அமைந்திருக்கும் வெவ்வேறு மூன்று காணிகளில் , 9 1/2 பரப்பளவுள்ள காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் நியமனம்

கல்லூரியில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதை நிவர்த்திக்கத் தற்காலிக ஆசிரியர் நியமனம் ஒன்றிற்கு கல்லூரி நிர்வாகம் நிதி உதவி கோரியதற்கிணங்க, 6 மாத காலத்துக்குரிய ஆசிரியர் வேதனம் வழங்கப்பட்டது.