Home > Projects > 2015 இல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்.

6ம் வகுப்பின் புகுமுக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் எமது திட்டத்தின் தொடர்ச்சியாக, இவ்வருடம் 95 மாணவர்களுக்கு ரூபா 208675.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் நூலகர் வேதனமாக மாதாந்தம் ரூபா 5000.00 வழங்கப்பட்டு வருகிறது.

கல்லூரியில் கணித பாட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க வேண்டி அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, கணித பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கடந்த யூலை 2015 முதல் எம்மால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடிப்படைச் சம்பளமாக ரூபா.16000.00 வழங்கப்பட்டு, செப்ரெம்பர் 2015 இலிருந்து மாதாந்தம் ரூபா 20000.00 வழங்கப்பட்டு வருகிறது.

கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் வடக்குப் பகுதி வெள்ளம் தேங்கும் தாழ் நிலப் பகுதியாகக் காணப்பட்டமையால் அதற்கு மண் இட்டு நிரவும் பணியில் ரூபா 89100.00 செலவிடப்பட்டுள்ளது. அத்தோடு விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுவேலி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2016 இன் செயற்பாடுகள்.

இவ்வருடம் 6ம் வகுப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள 85 மாணவர்களுக்கு ரூபா 160000.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் எமது சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் சுற்றுவேலி அமைக்கும் பணிகள் கல்லூரி அதிபரின் முழு ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்டு முடிவுறும் கட்டத்தை நெருங்கியுள்ளன. இதற்கான திட்டமதிப்பீடு அண்ணளவாக ரூபா 1 800 000.00 ஆகக் கணிப்பிடப்பட்டுள்ளது.

janahansalaryincrease001