Home > Projects > 2016 ம் ஆண்டின் செயற்றிட்டங்கள்

விளையாட்டு மைதான சுற்றுவேலி.

கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் சுற்றுவேலி அமைக்கும் பணி இவ்வாண்டின் பாரிய திட்டமாக முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தின் கிழக்கு எல்லை வேலியின் ஒரு சிறு பகுதி தவிர்ந்த 95% மான பகுதி வேலைகள் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலுடன் இணைந்த வளைவு, சுற்றுமதிலாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக கல்லூரி அதிபர் திரு. சி. கிருபாகரன் அவர்களின் மேற்பார்வையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்காக இதுவரையில் எமது சங்கம் 2 201 228.00 (இருபத்தியிரண்டு இலட்சத்து ஆயிரத்து இருநூற்றி இருபத்தியெட்டு) ரூபாய்களைச் செலவிட்டுள்ளது. இதற்கான நிதியுதவியை வழங்கிய எம் உறுப்பினர்களுக்கு சங்கம் பெருமையுடன் நன்றி தெரிவிக்கிறது.

நூலகர் வேதனம்

கல்லூரியின் நூலகர் வேதனம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வருடத்திற்கான மொத்த வேதனமாக 60 000.00 (அறுபதாயிரம்) ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது.

கணித பாட ஆசிரியர் வேதனம்

2015 யூலை மாதம் எம்மால் நியமிக்கப்பட்ட கணித பாட ஆசிரியர் 2016 யூன் மாதம் வரை கல்லூரியில் கடமையாற்றியிருந்தார். 2016ம் ஆண்டிற்கான வேதனமாக அவருக்கு 120 000.00 (ஒரு இலட்சத்து இருபதாயிரம்) ரூபாய்கள்  வழங்கப்பட்டுள்ளது.