Home > Publications > தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை

வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, மண்டைதீவு, காரைநகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி இலங்கையின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ள தீவுத் தொகுதி தீவகம் என்றழைக்கப்படுகின்றது. இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ளது.

தீவகமானது புவியியல் ரீதியாக தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணப் பெருநிலப்பரப்புக்கும் இடையில் அமைந்துள்ளதால் வரலாற்று ரீதியாக பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியில் சிறப்பிடம் பெற்றுள்ளது (குகபாலன், 1994). தீவகத்தில் இருந்து காலத்திற்குக் காலம் தனிநாயகம் அடிகள் போன்ற உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் தோன்றியுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு பகுதியான தீவகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மற்றைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது தீவகமானது கல்வி வசதி, சுகாதார வசதி, குடிநீர, போக்குவரத்து, மின்சாரம அபிவிருத்தி போன்ற பௌதீக நிலைமைகள் குறைந்த பிரதேசமாக உள்ளது. இதன் காரணமாக தீவக மக்கள் பல்வேறு இடப்பெயர்வுகளை மேற்கொள்ளகின்றனர். தீவக மக்கள் யாழ்ப்பாணத்திற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்நது வாழ்கின்றனர். 1953 ஆம் ஆண்டில் அப்போதைய அரசு அதன் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பல்வேறு குடியேற்றங்களை ஏற்படுத்தியது. இதன்போது தீவகத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கைiயான மக்கள் கிளிநொச்சியில் குடியேறினர்.இதனை விட கடந்த காலப்போர் நடவடிக்கைகளாலும் தீவகத்தைச் சேர்ந்த பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்தனர்.