Home > செயற்திட்டங்கள்

2016 ம் ஆண்டின் செயற்றிட்டங்கள்

விளையாட்டு மைதான சுற்றுவேலி. கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் சுற்றுவேலி அமைக்கும் பணி இவ்வாண்டின் பாரிய திட்டமாக முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தின் கிழக்கு எல்லை வேலியின் ஒரு சிறு பகுதி தவிர்ந்த 95% மான பகுதி வேலைகள் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலுடன் இணைந்த வளைவு, சுற்றுமதிலாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக கல்லூரி...

2015 இல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்.

6ம் வகுப்பின் புகுமுக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் எமது திட்டத்தின் தொடர்ச்சியாக, இவ்வருடம் 95 மாணவர்களுக்கு ரூபா 208675.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் நூலகர் வேதனமாக மாதாந்தம் ரூபா 5000.00 வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரியில் கணித பாட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க வேண்டி அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, கணித பட்டதாரி...

2014 இல் தொடரும் பணிகள்

6ம் வகுப்பின் புகுமக மாணவர்க்கு ரூபா 167150.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகத்தின் புற்றரைப் பராமரிப்புக்காக ரூபா 22000.00 பெறுமதியான புல் வெட்டும் இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் நூலகர் வேதனம் , இணையக் கட்டணங்கள் எம்மால் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன. 2014ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஏனைய செயற்றிட்டங்கள். விளையாட்டு மைதான...

2013ம் ஆண்டின் பாரிய திட்டம்

2013ம் ஆண்டின் மிகப் பெரிய திட்டமாக கல்லூரியின் நுழைவாயில் நிர்மாணிக்கும் திட்டம் எம்மால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 25.6.2013இல் அடிக்கல் நாட்டப்பட்டு 01.11.2013 இல் அதன் திறப்பு விழாவுடன் நிறைவேற்றம் கண்டுள்ளது. அதனோடிணைந்த உள்ளக வீதியும் எம்மால் அமைக்கப்பட்டுள்ளது.

நுழைவாயில் முகப்பு அமைத்தல்

கல்லுாரியின் புதிய நுழைவாயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா எமது கல்லுாரியின் புறத்தோற்றம் அழகுறவும், காண்போர் மனதில் அதன்பால் ஓர் மதிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் கம்பீரமிக்க, கலைத்துவம் மிளிரும் ஓர் புதிய பிரதான நுழைவாயில் நிர்மாணிக்கும் திட்டம் இவ்வாண்டு எமது சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. அதன் அடிக்கல் நாட்டு விழா 25.06.2013 அன்று சம்பிரதாயபூர்வமாக எம் கல்லுாரி...

2013 ம் ஆண்டின் செயற்றிட்டங்கள்

கற்றல் உபகரணங்கள் வழங்கல்: 2013 ம் ஆண்டின் தரம் 6 இன் புகுமுக மாணவர்களுக்கு 165000.00 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் எமது சங்கத்தால் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் எமது செயற்குழு உறுப்பினர் திருமதி. திலகவதி பரராஜசேகரன்,கோட்டக் கல்வி அதிகாரி திரு. ஆரூரன், வேலணை பழைய மாணவர் சங்கப் பொருளாளர் திரு. மகாலிங்கம் ஆகியோர் கலந்து...

2012 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள்

6ம் வகுப்பின் புகுமுக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்காக ரூபா 165000.00 ஒதுக்கப்பட்டது. நூலகப் பொறுப்பாளர் வேதனமாக மாதாந்தம் ரூபா 5000.00 வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்க்கு உதவும் அடிப்படையில், மாணவி ஒருவருக்கு 2011 செப்ரெம்பர் முதல் 2012 ஏப்ரல் வரை ரூபா.12000.00 வழங்கப்பட்டது.

மட்டு-அம்பாறை மக்களுக்கான அவசரகால நிதி உதவித்திட்டம்

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இடம்பெயர்ந்து அவதியுற்ற மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவசர நிதியுதவியாக, எமது உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 200,000 இலங்கை ரூபா, அக்கரைப்பற்றிலுள்ள வள்ளியம்மை-கந்தையா ஞாபகார்த்த நம்பிக்கை நிதியத்தினூடாக அளிக்கப்பட்டது. குறிப்பாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்றிருந்த கோளாவில் கிராம மக்களுக்கும், ஏனைய ஒன்பது பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கும்...

2011 செயற்திட்டங்கள்

இவ்வாண்டின் முதலாவது செயற்திட்டமாக ஆறாம் வகுப்பு புகுமுக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வாண்டில் ஆறாம் வகுப்பில் புதிதாக இணைந்துள்ள 80 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்காக 90,000.00 ரூபா வழங்கப்பட்டுள்ளது. தொண்டர் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் செயற்திட்டம் இவ்வாண்டிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2010 செயற்திட்டங்கள்

இவ்வாண்டின் முதலாவது திட்டமாக, ஜனவரி மாதம் ஆறாம் வகுப்பில் பிரவேசித்த 85 புதிய மாணவர்களுக்காக கற்றல் உபகரணங்கள் எமது சங்கத்தால் வழங்கப்பட்டது. இதற்காக 100,000.00 ரூபா வழங்கப்பட்டது. கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, கல்லூரி நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள் மூவருக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் பொறுப்பினை, 2010 ஆகஸ்ட் மாதத்திலிருந்து எமது சங்கம்...